நண்பர்கள் தினத்தையொட்டி தன்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள் புகைப்படத்தை பகிர்ந்த அஜித்

நண்பர்கள் தினத்தையொட்டி தன்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள் புகைப்படத்தை பகிர்ந்த அஜித்


சென்னை,

நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து 33 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். யாருடைய உதவியும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து தனது கடின உழைப்பினால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி ஸ்டார் நடிகராக உருவெடுத்தவர் அஜித்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் 1990-ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து 1993-ல் வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்கள் அவருக்கு பெரிய ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. காதல் நடிகராக மட்டுமே அறியப்பட்ட அஜித், ‘தீனா’, ‘சிட்டிசன்’, ‘ரெட்’, ‘வில்லன்’ படங்களில் தன்னை ஆக்சன் நாயகனாகவும் வலுப்படுத்திக்கொண்டார். பில்லா திரைப்படம் அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. மங்காத்தா படத்தில் நெகடிங் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கொண்டாட வைத்தார்.

தற்போது ஆக்சன் மற்றும் குடும்ப படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கார் ரேசிலும் ஈடுபாடுடன் கலந்து கொண்டு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார் அஜித். பெல்ஜியமில் சமீபத்தில் நடைபெற்ற கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியிருந்தது. ஏற்கனவே, துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் பரிசுகளை வென்று இருந்தது. நடிகர் அஜித் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி 33 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நண்பர்கள் தினமான இன்று பலரும் தங்கள் நண்பர்களுடான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும் நினைவுகளைப் பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா நடிகர் அஜித்துடன் இயக்குநர்கள் ஏ. ஆர். முருகதாஸ், சிவா, ஆதிக் ரவிச்சந்திரன், அனிருத் உள்ளிட்டோர் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், “நண்பர்கள் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அது நேற்று, இன்று, நாளை மற்றும் எப்போதும் உள்ளது. நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் அஜித் ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளது. நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *