நட்டி நடிப்பில் வரலாற்று பின்னணியில் தயாராகும் "நீலி"

நட்டி நடிப்பில் வரலாற்று பின்னணியில் தயாராகும் "நீலி"


உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘நீலி’. ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ()எ) நட்ராஜ் சுப்ரமணியம் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் இந்த படத்தை இயக்குகிறார்.

2400 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வரலாற்று பின்னணியில் இந்த நீலி திரைப்படம் உருவாகிறது. அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.

படம் குறித்து இயக்குநர் எம்எஸ்எஸ் கூறும்போது, “நீலி சம்பந்தமான நிறைய வரலாற்று விஷயங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதனுடன் கொஞ்சம் கற்பனை நிகழ்வுகளையும் கலந்து இந்த கதையை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தின் வித்தியாசமான கதையை கேட்டதுமே பிடித்துப்போய் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டார் நடிகர் நட்டி. இரண்டு முக்கிய நாயகிகள் நடிக்கிறார்கள். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *