நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடித்த “ரைட்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

சென்னை,
அறிமுக இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி எனும் நட்ராஜ், அருண் பாண்டியன் இணைந்து நடித்துள்ள படம் ‘ரைட்’.இது திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இதில் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
வீரம் படத்தில் இடம்பெற்ற குழந்தை நட்சத்திரம் யுவினா பார்தவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை ஏற்பட்டால் என்னவாகும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் ஒரு கமர்ஷியல் திரில்லர் ஆகும். ‘ரைட்’ படம் வருகிற 26ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘ரைட்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.