நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் 'ரைட்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை,
அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி நடராஜ் மற்றும் அருண் பாண்டியன் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ‘ரைட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.