நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு

நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு


மும்பை,

பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர், 2015 ஆம் ஆண்டில் இருந்து 2023 காலகட்டங்களில் ரூ.60.48 கோடி பணம் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரும் தங்களின் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதிக வட்டியை தவிர்க்க, இதை ‘முதலீடு’ என்று மாற்றி பதிவு செய்ததாக கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பணம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன், அந்தத் தொகையை முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர். இந்த சூழலில், கடந்த 2016ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்துள்ளார். அதன்பிறகு, அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து தனக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என்று கோத்தாரி குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக ஜூஹு காவல் நிலையத்தில் கோத்தாரி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மும்பை போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை செய்து வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *