நடிகை திவ்யா உன்னி தலைமையில் நடனக் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

நடிகை திவ்யா உன்னி தலைமையில் நடனக் கலைஞர்கள் கின்னஸ் சாதனை


கொச்சி,

தமிழில் ஆண்டான் அடிமை, கண்ணன் வருவான், சபாஷ், பாளையத்து அம்மன், வேதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். . திருமணத்துக்குப் பிறகு குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் அவர், அங்கு நடனப்பள்ளி நடத்தி வருகிறார். சமீபத்தில் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாக திவ்யா உன்னி தெரிவித்து இருந்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் நடிகையும் நடன கலைஞருமான திவ்யா உன்னி தலைமையில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது. 11 ஆயிரத்து 600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நடன நிகழ்ச்சியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 550 நடன ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இவர்கள் ஒரே மாதிரி உடையணிந்து 8 நிமிட பாடல் ஒன்றுக்கு நடனமாடினர். இதற்கு முன் 10,176 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்நிகழ்ச்சி முறியடித்துள்ளது.

View this post on Instagram

A post shared by Mridanga Naadam (@mridanga_naadam)

கேரள மந்திரி சஜி செரியன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமா தாமஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக உமா தாமஸ் எம்.எல்.ஏ., 18 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *