நடிகை திரிஷா வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்|Bomb threat at actress Trisha’s house

சென்னை,
தேனாம் பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. அதேபோல் முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு , பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் வீடு மற்றும் கவர்னர் மாளிகைக்கும் வெடி குண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து, மோப்பநாய் உதவியுடன் நடந்த சோதனையில் வெடி குண்டு மிரட்டல் போலி என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.