நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் செயலுக்கு குவியும் பாராட்டு…காரணம் என்ன?|Jacqueline Fernandez visits child with rare condition, pledges support

மும்பை,
பாலிவுட்டில் சிறப்புப் பாடல்களில் நடனமாடி அதிக ரசிகர்களை கவர்ந்தவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். சமீபத்தில் ”ரெய்டு 2” படத்தில் இவர் நடனமாடி இருந்தார்.
சிறப்பு பாடல்களுக்கு மட்டுமில்லாமல், கிக், ஜுட்வா 2, ஹவுஸ்புல் மற்றும் பதே போன்ற பாலிவுட் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், ”ஹைட்ரோகெபாலஸ்” என்ற ஒரு அரியவகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவ முன்வந்துள்ளார். குழந்தையின் அறுவை சிகிச்சை தொடர்பான அனைத்து மருத்துவச் செலவுகளையும் தான் செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.
நடிகையின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதற்கிடையில், அந்த குழந்தையுடன் நடிகை விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.