நடிகை சீதாவின் தாயார் காலமானார்

நடிகை சீதாவின் தாயார் காலமானார்


சென்னை,

‘ஆண் பாவம்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை சீதா. அதன் பின்னர் ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, சங்கர் குரு, தங்கச்சி, துளசி, குரு சிஷ்யன், பெண்மணி அவள் கண்மணி, அவள் மெல்ல சிரித்தாள், புதிய பாதை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கும் நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

நடிகை சீதாவின் தாயார் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். விருகம்பாக்கத்தில் தனது தாயாருடன் சீதா வசித்து வந்தார். தன் அம்மாவின் புகைப்படத்தை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘இன்று காலை எங்களது பாசமிகு தாயார் சந்திரா மோகன் இறைவனடி சேர்ந்தார்’ எனப் பதிவிட்டிருக்கிறார். சீதாவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Seetha PS (@seethaps67)




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *