நடிகை சிம்ரன் சொன்ன வார்த்தை|Actress Simran’s words

சென்னை,
சென்னையில் நடிகை சிம்ரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 100 நாட்கள் தாண்டி ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் சினிமாவிற்கு புதுமுக நடிகர் நடிகைகள் தேவை அது அவசியமாக உள்ளது. நடிகைகள் அதிக ஆண்டு வெற்றிகரமாக வலம்வர நல்ல கதைதான் முக்கியம். ஒரு நடிகருக்கு நல்ல கதாபாத்திரம் முக்கியம் அந்த கதாபாத்திரத்திற்கு 100 சதவீத உழைப்பை கொடுத்து நடிக்க வேண்டும். தேசிய விருது வாங்க எனக்கு ஆசை இருக்கிறது அது எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
தொடர்ந்து விஜய், அஜித் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சிம்ரன்,
கார் ரேசிங் சென்றுள்ள அஜித்துக்கும், அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ள விஜய்க்கும் வாழ்த்துகள்..`ஆல் தி பெஸ்ட் மட்டும் தான் சொல்ல முடியும். நான் ரஜினி சாரோட தீவிர ரசிகை. கூலி படத்தின் முதல்நாள் காட்சியை காண ஆவலாக காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.