நடிகை சரோஜாதேவி பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது- கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூரு,
இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்த இவர் கடந்த ஜூலை 14-ந் தேதி வயதி முதிர்வு காரணாக பெங்களூருவில் மரணம் அடைந்தார். திரைத்துறையில் அவர் நிகழ்த்திய சாதனைக்காக அவருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
இந்த நிலையில் சரோஜாதேவி பெயரில் அபிநய சரஸ்வதி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கன்னட திரைத்துறையில் 25 ஆண்டுகள் சேவையாற்றிய பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும். இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், 100 கிராம் வெள்ளி பதக்கம் வழங்கப்பட உள்ளது. இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட உள்ளது.