நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் விஜய் – வைரலாகும் புகைப்படம் | Vijay at actress Keerthy Suresh’s wedding

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் விஜய் – வைரலாகும் புகைப்படம் | Vijay at actress Keerthy Suresh’s wedding


தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் “ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன்” போன்ற படங்களில் நடித்து உள்ளார். ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். மேலும் அந்த படத்திற்கு தேசிய விருது வென்றார். தற்போது தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். கடந்த 12-ந் தேதி இவர்களின் திருமணம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்துக்காக கோவா சென்றிருந்த தவெக தலைவரான நடிகர் விஜய், மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த வகையில் நடிகர் விஜய் மணமக்களை வாழ்த்தும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *