நடிகை கிரேஸ் ஆண்டனி திருமணம்

கேரளத்தைச் சேர்ந்த கிரேஸ் ஆண்டனி மலையாளத்தில் ‘ஹேப்பி வெட்டிங்’ எனும் படத்தில் அறிமுகமானார். பகத் பாசில் மனைவியாக கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். ஹலால் லவ் ஸ்டோரி, தமாஸா, அப்பன், நுணக்குழி படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘பறந்து போ’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தில் இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். இதை தொடர்ந்து இன்னும் பல தமிழ் பட வாய்ப்புகள் குவியும் என்றும் கூறினார்கள்.
இந்நிலையில், தனக்கு கூட்டமில்லாமல், லைட்டுகள் இல்லாமல், சப்தமில்லாமல் திருமணம் நடைபெற்றதாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை நடிகை கிரேஸுக்கு தெரிவித்து வருகிறார்கள்