நடிகை கல்பிகாவுக்கு மனநலம் கோளாறு- அவரது தந்தை போலீசில் புகார் | Actress Kalpika has mental health issues

நடிகை கல்பிகாவுக்கு மனநலம் கோளாறு- அவரது தந்தை போலீசில் புகார் | Actress Kalpika has mental health issues


தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் கல்பிகா. கடந்த சில நாட்களாக பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் ‘பப்’ ஊழியர்களுடன் நள்ளிரவில் தகராறு செய்து அந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது. பப் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் ஐதராபாத் புறநகரில் ஒரு ரிசார்டில் மேலாளர் மற்றும் ஊழியர்களுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. ரிசார்ட் ஊழியர்கள் தன்னை திட்டியதாகவும் போதை மருந்து அடிமை என அழைத்ததாகவும் புகார் அளித்தார்.

இந்தநிலையில் கல்பிகா தந்தை கணேஷ் கச்சிபவுலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், கல்பிகா கடந்த காலத்தில் 2 முறை தற்கொலைக்கு முயன்றார். மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனநிலை சரியில்லாதவராக இருக்கிறார். அடிக்கடி குடும்பத்தினருடன் சண்டையிட்டு வருகிறார். தற்போது அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை. எனவே எங்கள் குடும்ப பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *