நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் ரம்யா நம்பீசன் திகழ்ந்து வருகிறார். |Actress Ramya sings and dances with girls

சேலம்,
மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா நம்பீசன். அதன் பின்னர் தமிழில், கடந்த 2005ம் ஆண்டு வெளியான “ஒரு நாள் ஒரு கனவு” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து, விஜய் சேதுபதிக்கு திருப்புமுனையாக அமைந்த “பீட்சா” திரைப்படத்தில் அவருடைய நாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ரம்யா நம்பீசன், தொடர்ச்சியாக தமிழில் “சேதுபதி”, “சைத்தான்”, “சத்தியா”, “சீதக்காதி” மற்றும் “நட்புன்னா என்னன்னு தெரியுமா” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
நடிகையாக மட்டுமில்லாமல் ரம்யா நம்பீசன் ஒரு மிகச்சிறந்த பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், சேலம், மல்லூர் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன் கலந்துகொண்டு பாடல் பாடி சிறுமிகளுடன் நடனமாடி அசத்தினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.