நடிகைகளுடன் 'மிட்நைட்' பார்ட்டியில் நடிகர் தனுஷ்… வைரலாகும் புகைப்படம்

மும்பை
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன குபேரா படம் தெலுங்கில் பெரிய வசூலை குவித்து இருந்தாலும் தமிழில் தோல்வி தான் அடைந்து இருக்கிறது.
தெலுங்கில் ஹிட் ஆனதை படக்குழு விழா வைத்து கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. தனுஷ் பிச்சைக்காரர் ரோலில் நடித்ததற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என சிரஞ்சீவி உள்ளிட்டோர் மேடையிலேயே கூறினார்கள்.
அடுத்து தனுஷ் இந்தியில்,ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் – கீர்த்தி சனோன் நடிக்கும் ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இதையொட்டி படக்குழு சார்பில் நேற்று மும்பையில் ‘மிட்நைட்’ பார்ட்டி அரங்கேறியது. இதில் நடிகைகள் தமன்னா, மிருணாள் தாகூர், பூமி பட்னேகர், கீர்த்தி சனோன், தயாரிப்பாளர் கனிகா டிலான் ஆகியோருடன் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். ‘பார்ட்டி’ தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.