நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்|Actor Robo Shankar’s cremation

சென்னை,
வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர்(வயது 46). இவர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்கள் படங்களிலும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.
இதற்கிடையில், சென்னையில் நேற்று படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து ரோபோ சங்கரின் உடல் அவர் வீட்டில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ரசிகர்கள் உறவினர்களின் பார்வைக்கு பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து அவரது ஊர்வலமாக பிருந்தாவன் நகர் மின்மயானத்திற்கு ஊரவலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.