நடிகர் ரிஷப் ஷெட்டியின் புதிய பட போஸ்டர் வெளியீடு

கன்னட சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. 2012 ஆம் ஆண்டில் வெளியான துக்ளக் என்கிற கன்னட படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள காந்தரா சாப்டர் 1 மற்றும் ஜெய் அனுமான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்த நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தினை அஷ்வின் கங்காராஜு இயக்க உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இந்த படத்தினை வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ள புதிய படத்தின் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.