நடிகர் ரஜினிகாந்த் விரும்பி சாப்பிடும், தவிர்க்கும் உணவுகள்; வெளியான ருசிகர தகவல்

நடிகர் ரஜினிகாந்த் விரும்பி சாப்பிடும், தவிர்க்கும் உணவுகள்; வெளியான ருசிகர தகவல்


சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்தனர். அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எனினும், அலட்டல், கூச்சல் எதுவும் இல்லாமல் பிறந்த நாளை எளிமையாகவும், அமைதியாகவும் அவர் கொண்டாடி வருகிறார். இதேபோன்று, அவருடைய உணவும் எளிமையாக அமைந்துள்ளது. அவர் விரும்பி சாப்பிடும் உணவுகள் தமிழக பாரம்பரிய சமையலை அடிப்படையாக கொண்டுள்ளது.

அவர் விரும்பி சாப்பிட கூடிய உணவு வகைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, அவர் வத்த குழம்பை விரும்பி சாப்பிடுவார். அந்த வத்த குழம்பானது நன்றாக கெட்டியாக, வெயிலில் காய வைத்த காய்கறிகளுடன், புளி மற்றும் மணத்தக்காளி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. புளியில் உள்ள புளிப்பு தன்மை, மிளகாயில் உள்ள காரம், மணத்தக்காளியின் சுவை ஆகியவற்றை அவர் விரும்பி எடுத்து கொள்வார். சூடான சாதம் மற்றும் நெய்யுடன் கலந்து பாரம்பரிய முறையில் பரிமாறப்படுகிறது.

 

அடுத்து பால் பாயசம். தென்னிந்தியாவின் பிரபல இனிப்பு வகைகளில் ஒன்றான இதில் பால், அரிசி மற்றும் சர்க்கரை ஆகிய மூன்றும் முக்கிய இடம் பெறுகின்றன.

பால் கெட்டியாகி, தந்த நிறம் வரும் வரை சமைக்கப்படுகிறது. கிரீம் போன்ற சுவை வரும் வரை அது தயாரிக்கப்படுகிறது. அதற்கு பொறுமையாக இருந்து, சுட வைக்க வேண்டும். அவருடைய பிறந்த நாளின்போது குடும்பத்துடன் பால் பாயசம் சாப்பிடுவதில் விருப்பம் கொண்டவர்.

இதன்பின் அவருடைய விருப்பத்திற்குரிய உணவாக, மாதுளை பழச்சாறு உள்ளது. இயற்கையிலேயே இனிப்பு சுவை கொண்ட அதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. நோயெதிர்ப்பு பண்புகள் அதிகம் கொண்ட அது உடல் மற்றும் இருதய நலனுக்கு ஏற்றது. இதனை அவர் விரும்பி சாப்பிடுவார்.

எனினும், அவர் 5 உணவுகளை தவிர்க்கிறார் என பிரபல டாக்டர் ஒருவர் கூறுகிறார். அவருடைய உணவில் உப்பு, சர்க்கரை, மைதா, பால் மற்றும் தயிர் ஆகியவற்றை விலக்கி வைக்கிறார் என கூறுகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *