நடிகர் மதன் பாப் உடல் தகனம்

நடிகர் மதன் பாப் உடல் தகனம்


சென்னை,

சினிமா குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், இன்று பிற்பகலில் மதன் பாப்பின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மயானத்தில் மதன் பாப் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மதன்பாப் தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார். சென்னையில் 1953 -ம் ஆண்டு பிறந்த நடிகர் மதன்பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆகும். தேவர் மகன், பிரண்ட்ஸ், வில்லன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *