நடிகர் பிரபாசுக்கு விரைவில் திருமணமா..?

சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். 45 வயதை கடந்த இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாதநிலையில், எப்போது திருமணம் செய்ய போகிறார்? யாரை திருமணம் செய்ய போகிறார் என்று ஆவலுடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
பிரபாஷின் திருமணம் குறித்து அவ்வப்போது சில வதந்திகள் பரவி கொண்டுதான் வருகின்றன. இந்நிலையில், பிரபாசின் தந்தை வழி உறிவினர் அளித்துள்ள பேட்டியில், “சிவபெருமானின் ஆசி பொழியும்போது பிரபாஸ் திருமணம் செய்துகொள்வார். நாங்கள் அனைவரும் பிரபாசின் திருமணத்திற்காக முயற்சி எடுத்து வருகிறேம். சிவபெருமானின் அருளாசியல் பிரபாசின் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.