நடிகர் நிவின் பாலியின் அடுத்த பட இயக்குனர் யார்?

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து ‘டியர் ஸ்டூடன்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்தில் நடித்துவருகிறார்.
இது தவிர தமிழில் நிவின் பாலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ எனும் படத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் நிவின் பாலியின் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இயக்குனர் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலி நடிக்க உள்ளாராம். இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், இது அரசியல் கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.