நடிகர் ஜெய் நடிக்கும் ‘ஒர்க்கர்’ படத்தின் அப்டேட்

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெய் தற்போது ‘ஒர்க்கர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ரீஷ்மா நனையா நடிக்கிறார்.
வினய் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று இருக்கிறது. ஒளிப்பதிவாளர்: அஞ்சி. இசை: ஜிப்ரான்.
வினய் கிருஷ்ணா கூறுகையில், ‘‘உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதை, ரசிகர்களை கவரும் தருணங்கள் என `ஒர்க்கர்’ படம் சிறப்பாகவே தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை விரும்புவார்கள். விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களுக்காக வெளியிடப்படும்”, என்றார். எதிர்பார்ப்புகளுக்கிடையே தயாராகும் இந்த படத்தை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் சார்பாக எம்.ஷோபனா ராணி தயாரிக்கிறார்.