நடிகர் சிவகார்த்திகேயனின் 24-வது படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. |Sivakarthikeyan presents a gift to the director of ”Good Night”

நடிகர் சிவகார்த்திகேயனின் 24-வது படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. |Sivakarthikeyan presents a gift to the director of ”Good Night”


சென்னை,

“குட் நைட்” படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுக்கு சிவகார்த்திகேயன் பரிசளித்திருக்கிறார். இயக்குனரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இருக்கிறார் .

இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர், ”வாழ்த்துகள் மற்றும் பரிசுக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா. இந்த வருட பிறந்தநாளை இது மிகவும் சிறப்பாக்கியது” என்று தெரிவித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் 24-வது படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தந்தை-மகன் பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படும் இப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *