நடிகர் கிங்காங்கின் இல்லத் திருமண நிகழ்ச்சி: மணமக்களை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

நடிகர் கிங்காங்கின் இல்லத் திருமண நிகழ்ச்சி: மணமக்களை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்


சென்னை,

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்குப் பெயர்போனவர் நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் ‘அதிசயபிறவி’ படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கிங்காங். இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர்.

நடிகர் கிங்காங்கின் மகள் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் கிங்காங்கின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். கயல் தேவராஜ், முத்துக்காளை உள்ளிட்ட நடிகர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கிங்காங் அவர்களின் மகள் கீர்த்தனா – நவீன் தம்பதியினருக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *