நடிகர்களுக்கு மட்டும் சலுகை தருவதா? – பாலிவுட் நடிகை ஆதங்கம், Are concessions given only to actors?

பிரபல இந்தி நடிகையான ராதிகா மதன், சினிமாவில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “நான் கிட்டத்தட்ட ஒருநாளைக்கு 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை நடிக்கிறேன். இயக்குநர் சொல்வதுபோல் உழைக்கிறேன். ஆனால் சில நடிகர்-நடிகைகளுக்கு அப்படி உழைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சில நடிகர்கள் எல்லாம் 8 மணி நேரம் கூட பங்களிப்பு தருவது கிடையாது.
பெண்கள் எங்கள் சூழ்நிலையை சொல்லி அனுமதி கேட்டால் கூட கிடைப்பதில்லை. ஆனால் அதே நடிகர்கள் கேட்டால் உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. நடிகர்களுக்கு வழங்கப்படும் சலுகை, நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை. இந்த நிலை மாறினால் மட்டுமே சினிமா முன்னேறும்” என்று கூறியுள்ளார். இது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.