நடனத்தில் அசத்தும் சாயிஷா… வைரலாகும் வீடியோ

சென்னை,
ஏ.எல்.விஜய் இயக்கிய வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் சாயிஷா. அதனைத் தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’, ‘காப்பான்’, ‘டெடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. காதல் கைகூடி திருமணத்தில் முடிந்தது. ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை உள்ளது.
குழந்தை பெற்றதற்கு பிறகு மீண்டும் நடிப்பதில் சாயிஷா ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக கதைகளையும் ஆர்வமாக கேட்டு வருகிறார். ‘கஜினிகாந்த்’, ‘டெடி’ படங்களைத் தொடர்ந்து ஆர்யா-சாயிஷா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள்.
பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புகைப்படங்களை ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வந்தார். சமீபத்தில் நடனமாடும் வீடியோக்களை அடுத்தடுத்து சாயிஷா பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2013-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘ரேஸ் 2’ படத்தில் இடம்பெற்ற ‘லாட் லக் கையி’ பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.