தொடர்ந்து மிரட்டல் – சிம்பு பட நடிகை போலீசில் புகார்

தொடர்ந்து மிரட்டல் – சிம்பு பட நடிகை போலீசில் புகார்


சென்னை,

சிம்புவுடன்�’ஈஸ்வரன்’, உதயநிதியுடன்� ‘கலக தலைவன்’, ஜெயம் ரவியுடன்� ‘பூமி’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நிதி அகர்வால். தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் மற்றும் பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், சமூக வலைதளங்களில் ஒருவர் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுவதாக சைபர் கிரைம் போலீசில் நிதி அகர்வால் புகார் அளித்திருக்கிறார்.

இதுதொடர்பாக நடிகை நிதி அகர்வால் அளித்துள்ள புகாரில், ‘சமூக வலைதளங்கள் மூலம் ஒருவர் என்னையும், எனது குடும்பத்தினரையும் குறிவைத்து தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால், நான் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கிறேன். எனவே அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இந்த புகாரின் பேரில் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *