தொடங்கியது பிக் பாஸ் 9 : போட்டியாளர்களின் விவரம்

தொடங்கியது பிக் பாஸ் 9 : போட்டியாளர்களின் விவரம்


சென்னை,

தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் ‘பிக்பாஸ்’ என்ற ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.7-வது சீசனுடன் கமல்ஹாசன் விலகியநிலையில், 8-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 9-வது சீசன் இன்று தொடங்கியுள்ளது.

போட்டியின் தொடக்க நாளான இன்று போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வருகிறார்கள்.

திவாகர் – வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், சமூக வலைதளங்களில் பிரபலமானவர். இவர் பிசியோதெரபி மருத்துவர்.

அரோரா சின்க்ளேர் – மாடலிங் துறையைச் சேர்ந்த இவர், புதுச்சேரியை சேர்ந்தவர். மாடலிங் துறையைத் தேர்வு செய்து, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

எப்.ஜே – ராப் பாடகரான இவர் ஒரு பீட் பாக்ஸ் கலைஞர். விவசாயிகள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக தனது பாடல்களை எழுதி பாடுவது இவரது தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது.

பார்வதி – யூடியுப் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான இவர், தற்போது சின்ன திரை பிரபலமாகவும் இருந்து வருகிறார்.

 

துசார் – இவரின் பெற்றோர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். நடிகனாக வேண்டும் என்ற கனவில், சினிமா துறைக்கான வாய்ப்புகளுக்காக முயற்சித்து வருகிறார்.

கனி – குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றியாளராகத் தேர்வானவர். இயக்குநர் அகத்தியனின் மகள். சில படங்களில் நடித்துள்ளார்.

சபரி – விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலைக்காரன், பொன்னி தொடரில் நடித்தவர்.

பிரவீன் காந்தி – ஜோடி திரைப்பட இயக்குனர்

கெமி – கூடைப்பந்து வீராங்கனை

ஆதிரை – சீரியல் நடிகை

ரம்யா ஜோ – ஆடல் பாடல்  நிகழ்ச்சி நடிகை

வினோத் – கானா பாடல்

வியானா – மாடலிங் துறையைச் சேர்ந்தவர்

பிரவீன் – சீரியல் நடிகர்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *