தேவயானியின் 'நிழற்குடை' படம்… ஓ.டி.டி.யில் வெளியாவது எப்போது?

சென்னை,
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். இவர் இதுவரைக்கும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில், நடிகை தேவயானியின் நடிப்பில் கடந்த மே 9-ந் தேதி வெளியான படம் ‘நிழற்குடை’. தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் நிழற்குடை திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி,நீலிமாஇசை, நிஹாரிகா, அஹானா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படமாக உருவாகி உள்ள இப்படம் திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 30-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.