தேடிக் கொண்டே இருங்கள்… மலைக்கா அரோராவுக்கு அர்ஜுன் கபூர் வாழ்த்து

மும்பை,
இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. அர்பாஸ்கானை திருமணம் செய்து கொண்ட மலைக்கா அரோரா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரும் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருடன் மலைக்கா அரோராவுக்கு காதல் ஏற்பட்டது. மலைக்காவும் அவரை விட 12 வயது குறைந்த அர்ஜுன் கபூரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
கடந்தாண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். பிரிந்த பிறகும் நண்பர்களாக இருந்து வந்தனர். சமீபத்தில் நடந்த ஹோம்பவுண்ட் படத்தின் பிரீமியர் காட்சியின் போது மலைக்காவும், அர்ஜுன் கபூரும் கட்டி பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இந்நிலையில் மலைக்கா அரோரா தனது 52-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அர்ஜுன் கபூர் பாரீசில் இருந்த புகைப்படத்தை பகிர்ந்து, ‘பிறந்தநாள் வாழ்த்துகள். தொடர்ந்து உயரே செல்லுங்கள். தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருங்கள். எப்போதும் தேடிக் கொண்டே இருங்கள்’ என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
மலைக்கா அரோரா எப்போதும் வெளிப்படை தன்மையுடன் கருத்துக்களை வெளிபடுத்தி வருபவர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரியாலிட்டி ஷோவில், முழுமையாக சரியாக இல்லாத ஆண்களை எனக்கு பிடிக்கும். ஒரு வகையில் எல்லாவற்றையும் சரியாக செய்பவர்கள் அல்ல. மென்மையாக இருப்பவர்கள் அல்ல மிகவும் சரசமாடும் மற்றும் நன்றாக முத்தமிடும் ஆண்களை பிடிக்கும் என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.






