தேசிய விருது; அட்லீக்கு உருக்கமாக நன்றி சொன்ன ஷாருக்கான்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்து கலக்கிருப்பார்.
இந்த நிலையில், நேற்று 71-வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தனர் அதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஷாருக்கான் ‘ஜவான்’ திரைப்படத்திற்காக வென்றுள்ளார். தனது 33 வருட சினிமா கெரியரில் ஷாருக்கான் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருக்கு முதல் தேசிய விருதை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில் ஜவான் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த அட்லீக்கு நன்றி என கூறி ஷாருக்கான் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.