"தேசிங்கு ராஜா 2" டிரெய்லர் வெளியானது

சென்னை,
‘பசங்க’ படத்தின் மூலம் அறிமுகமான விமல், எழில் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ‘தேசிங்குராஜா’ என்ற படத்தில் நடித்திருந்தார். நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
‘தேசிங்கு ராஜா 2’ முதல் பாகத்தில் இருந்து வித்தியாசமான கதைக்களத்திலும் முதல் பாகத்தைபோல் காமெடி கலந்த கதைக்களத்திலும் தயாராகி உள்ளது. இந்த படத்தில் விமல் தவிர குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளுசபா ஸ்வாமி நாதன் போன்றோர் நடித்துள்ளனர்.
இன்பினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் வருகிற ஜூலை 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நாயகிகளாக நடிக்கிறார்கள்
இந்த நிலையில் ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் ஜூலை 11ம் தேதி திரைக்கு வருகிறது.