தெலுங்கு "கபாலி " பட தயாரிப்பாளர் கேபி சவுத்ரி தூக்கிட்டு தற்கொலை

கோவா,
பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி என்கிற கே.பி.சவுத்ரி(44 வயது). இவர் தமிழில் ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர்.
இவர், கோவா மாநிலத்தின் வட பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அவரது அறை திறக்கப்படாமல் இருப்பதை கண்டு, அங்கே இருந்தவர்கள் சந்தேகம் கொண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது அவர் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன காரணத்தால் தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு போதைப்பொருள் சர்ச்சை தெலுங்கு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் சில முன்னணி பிரபலங்களிடம் போலீசார் போதைபொருள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கே.பி.சவுத்ரி பெங்களூர் மற்றும் கோவாவில் இருந்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. 2023ம் ஆண்டில், போதைப்பொருள் விற்பனை செய்ததாகக் கூறி கேபி சவுத்ரி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.