தென்னிந்திய நடிகைகளுக்கு பாலிவுட்டில் நடந்த சம்பவம்; மதுபாலா வேதனை

சென்னை,
ரோஜா, ஜென்டில்மேன் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் மதுபாலா. மதுபாலாவின் பேரழகும் அவரது நடிப்பும் தென்னிந்திய ரசிகர்களை மட்டும் இன்றி பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்து வந்தது. தமிழ் மலையாளம் தெலுங்கு மொழி படங்களில் நடித்த மதுபாலா இந்தி மொழியிலும் பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில் திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் சினிமாவிலிருந்து பல வருடங்களாக ஒதுங்கி இருந்தார். மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கும் மதுபாலா ஸ்வீட் காரம் காபி என்ற வெப் தொடர் மற்றும் கண்ணப்பா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் பாலிவுட்டில் சந்தித்த கேலி பிரச்சனைகள் குறித்து அவர் கூறியதாவது:- தென்னிந்திய கலைஞர்கள் ஒரு காலகட்டத்தில் பாலிவுட்டில் பெரிய கேலிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. அந்த காலகட்டத்தில் நாங்கள் சந்தித்த பிரச்சினைகளால் எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. நாம் இந்தியர்கள் ஏன் இப்படி ஒருவருக்கொருவர் நடந்து கொள்ள வேண்டும். அவர்களது கேலிகளுக்கு எங்களால் பதில் அளிக்க கூட முடியவில்லை அந்நேரத்தில் எப்படி போராட வேண்டும் என்றும் எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.