துல்கர் சல்மான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தயாரிப்பாளர் |Producer plays a key role in his upcoming film headlined by a star hero

துல்கர் சல்மான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தயாரிப்பாளர் |Producer plays a key role in his upcoming film headlined by a star hero


சென்னை,

மலையாள நடிகர் துல்கர் சல்மான், செல்வமணி செல்வராஜு இயக்கத்தில் நடித்து வரும் படம் ”காந்தா”. இயக்குனர் செல்வமணி செல்வராஜு நெட்பிளிக்ஸில் வெளியான ‘தி ஹன்ட் பார் வீரப்பன்’ என்ற வெப் தொடரை இயக்கியவர்.

ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா, துல்கர் சல்மானின் வேபேரர் பிலிம்ஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் இணைந்து ”காந்தா” படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், ராணா டகுபதி இந்த படத்தை தயாரிப்பதோடு மட்டுமில்லாமல், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது பாகத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கும் இந்த படம் ஆகஸ்ட் 1-ம் தேதி திரைக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *