துருவ் விக்ரமின் அடுத்த படம்…இயக்குனர் இவரா?|Dhruv Vikram to team up with Dada film director?

துருவ் விக்ரமின் அடுத்த படம்…இயக்குனர் இவரா?|Dhruv Vikram to team up with Dada film director?


சென்னை,

ஆதித்ய வர்மா படம் மூலம் அறிமுகமான துருவ் விக்ரம், தனது முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறமையைக் காட்டினார். அவரது அடுத்த படமான மகான் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

தற்போது அவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 17 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அனுபமா கதாநாயகியாக நடித்த இந்தபடம் அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதனையடுத்து, துருவ் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையில், டாடா படப் புகழ் கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் அடுத்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது. இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *