'தும்பட்' இயக்குனரின் அடுத்த படைப்பு…'மாயசபா' டீசர் வெளியீடு

சென்னை,
‘தும்பட்’ என்ற ஒரு கல்ட் கிளாசிக் படத்தை வழங்கிய இயக்குனர் ரஹி அனில், இப்போது புதிய படைப்பை ரசிகர்களுக்கு கொண்டு வந்துளார். அவர் தற்போது இயக்கி உள்ள படம் ‘மாயசபா – தி ஹால் ஆப் இல்லுஷன்’.
இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ‘தும்பட்’ படத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான உலகம் வெளிப்படும் என்று தெரிகிறது.
குறிப்பாக இதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜாவேத் ஜாபேரி, இதுவரை கண்டிராத ஒரு புதிய அவதாரத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்த உள்ளார். மேலும், வீணா ஜம்கர், தீபக் டாம்லே, முகமது சமத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது.






