'துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும்'…வெளியானது ''மதராஸி'' டிரெய்லர்

'துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும்'…வெளியானது ''மதராஸி'' டிரெய்லர்


சென்னை,

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதராஸி படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இதற்கு இசை அமைக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதில் வித்யூத் கூறும், துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நாதாண்டா என்ற வசனம் வைரலாகி வருகிறது.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *