துபாயில் பிரபலத்துடன் தீபாவளி கொண்டாடிய ஆர்த்தி ரவி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி அறிக்கை வழியாக சண்டை போட்டுக்கொண்டனர். பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இருவரும் அமைதியாகி, தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ரவி மோகனின் விவாகரத்து விவகாரத்தில் நடிகை குஷ்பூ, ஆர்த்தி ரவிக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து வருகிறார். இருவரும் குடும்ப நண்பர்களாகவே தற்போது வரை இருந்து வருகிறார்கள். ஆர்த்தி ரவி, ரவி மோகனை பிரிந்தப்பின் தன் மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது கணவரை பிரிந்த சோகத்தில் இருந்து ஆர்த்தி ரவி மீண்டு வந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியிருக்கிறார்.
துபாயில் நடிகை குஷ்பு மற்றும் அவரின் மகள்களான அவந்திகா, அனந்திகாவுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை ஆர்த்தி ரவி பகிர்ந்துள்ளார். ஆர்த்தி ரவியின் மகன்கள் குஷ்புவின் மகள்களுடன் விளையாடிய புகைப்படங்களையும் அவர்கள் சென்ற இடங்களையும் உண்ட உணவுகளின் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார் ஆர்த்தி ரவி.
புதிதாக தயாரிப்பு நிறுவனம், இயக்கம் என மாறியுள்ள நடிகர் ரவி மோகன் தனது தீபாவளியை பாடகி கெனிஷாவுடன் கொண்டாடினார். ஜி.வி. பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் சூழ்ந்துக் கொண்டு இசையமைக்க கெனிஷா “கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு” பாடலை பாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.






