தீபிகா படுகோனேவுடன் தகராறா? “அனிமல்” பட நடிகை விளக்கம்

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கி வரும் ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பின்னர் திடீரென அவர் விலகினார். அவருக்கு பதிலாக ‘அனிமல்’ படத்தில் நடித்து பேசப்பட்ட பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி நடித்து வருகிறார்.
தீபிகா படுகோனே விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தினமும் 8 மணி நேர ‘கால்ஷீட்’ உடன்படிக்கைக்கு அவர் உடன்படாததே முக்கிய காரணம் என பேசப்படுகிறது.
இதற்கிடையில் தீபிகா படுகோனேவுக்கும், திரிப்தி திம்ரிக்கும் முட்டிக்கொண்டு விட்டதாகவும், இருவரும் சண்டை போட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை திரிப்தி திம்ரி மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “தீபிகா படுகோனே எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை. அவருடன் எனக்கு எந்த மோதலும் கிடையாது. சினிமாவில் இதெல்லாம் சகஜம். படவாய்ப்புகள் கிடைப்பதும், போவதும் கணிக்க முடியாதவை. எனவே வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” என்றார்.