தீபாவளி பண்டிகை: சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘அரசன்’ படக்குழு

சென்னை,
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ என்ற புதிய படத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு நடிக்கவிருக்கும் `அரசன்’ திரைப்படம் தனுஷ் நடித்திருந்த `வடசென்னை’ படத்தின் கதையுடன் தொடர்புடையது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்களிடமும், திரைப்பட ஆர்வலர்களிடமும் இந்தப் படம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘அரசன்’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் புரொமோ வீடியோ யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.