தீபாவளி இல்லை…பொங்கலும் இல்லையா? – சூர்யாவின் ''கருப்பு'' ரிலீஸ் எப்போது?

சென்னை,
சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் பாக்ஸ் ஆபீஸில் விஜய்யின் ஜனநாயகனுடன் மோத உள்ளது. சிவகார்த்திகேயனின் படம் விஜய்யின் படத்துடன் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை. விஜய்யின் முழு அரசியல் பிரவேசத்திற்கு முன் அவர் நடிக்கும் கடைசி படம் ”ஜனநாயகன்” என்பதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”ஜனநாயகன்” ஜனவரி 9-ம் தேதியும், ”பராசக்தி” ஜனவரி 14-ம் தேதியும் வெளியாக இருக்கிறது. இந்த ரேஸில் , சூர்யா நடித்துள்ள கருப்பு படமும் இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், சமீபத்திய தகவலின்படி, சூர்யாவின் கருப்பு படம் எதிர்பார்த்தபடி பொங்கலுக்கு வெளியாகாது என்று கூறப்படுகிறது.
ஆர்.ஜே. பாலாஜி இந்தப் படம் கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த படத்தில் சூர்யாவுடன் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.