'தி ராஜாசாப்' படத்தின் இரண்டாம் பாகம் வருமா? – இயக்குனர் மாருதி பதில்

சென்னை,
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பிரபாஸின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. அவர் நடித்துள்ள திகில் நகைச்சுவை படமான ”தி ராஜாசாப்” படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இந்த டீசர் வெளியீட்டு நிகழ்வில், இயக்குனர் மாருதியிடம் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ”இப்போதைக்கு 2-ம் பாகத்தை பற்றி யோசிக்கவில்லை. அப்படியே யோசித்தாலும், அதற்காக படத்தை முழுமையடையாமல் விடமாட்டேன். இதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன்” என்றார்.
பீப்பிள் மீடியா பேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கும் ”தி ராஜா சாப்” படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இதில், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.