‘தி பாரடைஸ்’ படத்தில் இணைந்த ’10 எண்றதுக்குள்ள’ நடிகர்|TheParadise

‘தி பாரடைஸ்’ படத்தில் இணைந்த ’10 எண்றதுக்குள்ள’ நடிகர்|TheParadise


சென்னை,

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடெலாவின் ‘தி பாரடைஸ்’ படத்தில் நடிகர் சம்பூர்ணேஷ் பாபு இணைந்துள்ளார்.

நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அடுத்தாண்டு மார்ச் 26ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், விக்ரமின் ’10 எண்றதுக்குள்ள’ படத்தில் கேமியோ ரோலில் நடித்த சம்பூர்ணேஷ் பாபு இப்படத்தில் இணைந்துள்ளார். அவர் இப்படத்தில் பிரியாணி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *