"தி டெவில் வேர்ஸ் பிராடா 2" – மீண்டும் இணைந்த நட்சத்திரங்கள்

வாஷிங்டன்,
லாரன் வெய்ஸ்பெர்கரின் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் “தி டெவில் வேர்ஸ் பிராடா”. கடந்த 2006-ம் ஆண்டு ஆன் ஹாத்வே, மெரில் ஸ்ட்ரீப் மற்றும் எமிலி பிளண்ட் நடிப்பில் வெளியான இந்த வெற்றிப் படத்தின் தொடர்ச்சியாக தற்போது “டெவில் வேர்ஸ் பிராடா 2” உருவாகி வருகிறது.
படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரீப், ஆன் ஹாத்வே, எமிலி பிளண்ட் மற்றும் ஸ்டான்லி டூசி ஆகியோர் இதிலும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை டேவிட் பிராங்கல் இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு மே 1 அன்று திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.