‘தி கேர்ள் பிரண்ட்’ படத்திற்காக சரியாகத் தூங்காத ராஷ்மிகா|Rashmika didn’t sleep well for ‘The Girlfriend’

‘தி கேர்ள் பிரண்ட்’ படத்திற்காக சரியாகத் தூங்காத ராஷ்மிகா|Rashmika didn’t sleep well for ‘The Girlfriend’


சென்னை,

ராஷ்மிகா தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறார். புஷ்பா படத்திற்குப் பிறகு, அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவரது கைகளில் மூன்று முதல் நான்கு பான் இந்திய படங்கள் உள்ளன.

தற்போது பெண்களை மையமாக கொண்ட தி கேர்ள் பிரண்ட் படத்தில் நடித்துள்ளார். ராகு ரவீந்திரன இயக்கிய இந்தப் படத்தில் தீட்சித் ஷெட்டி ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக ராஷ்மிகா மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.

நேற்று இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த நிகழ்வின்போது ஊடக சந்திப்பில் தயாரிப்பாளர் பேசுகையில், ’இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ராஷ்மிகா மிகவும் பிசியாக இருந்தார். ஒருபுறம் அவர் புஷ்பா படப்பிடிப்பில் பங்கேற்றுக்கொண்டிருத்தார். மறுபுறம் எங்கள் படத்திற்காக நேரம் ஒதுக்கினார்.

புஷ்பா 2 படத்தை அதிகாலை 2 மணி வரை படமாக்கிவிட்டு, காலை 7 மணிக்கு எங்கள் படத்தின் செட்டிற்கு வருவார். இரண்டு அல்லது மூன்று மாதங்களாக அவர் சரியாக தூங்கவில்லை. டிரஸ்ஸிங் ரூமில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு காலை படப்பிடிப்புக்கு வருவார். வேறு யாராலும் இவ்வளவு ஆதரவை வழங்கி இருக்க முடியாது. ராஷ்மிகா இல்லையென்றால் ’தி கேர்ள் பிரண்ட்”படம் இருந்திருக்காது’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *