''தி இந்தியா ஹவுஸ்'' படப்பிடிப்பில் விபத்து…வீடியோ வைரல்

சென்னை,
ராம் சரண் தயாரிப்பில் நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் முக்கிய காட்சிக்காக வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி நேற்று வெடித்து விபத்து ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில், நடிகர் நிகில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டதாகவும் கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பித்தோம். விலையுயர்ந்த பொருட்களை இழந்தோம், ஆனால் கடவுளின் அருளால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.