‘திரௌபதி' 2…வெளியானது முதல் பாடல் அப்டேட்

‘திரௌபதி' 2…வெளியானது முதல் பாடல் அப்டேட்


சென்னை,

‘திரௌபதி’ படத்தின் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் ரக்சனா இந்துசூடன் ‘திரௌபதி தேவி’யாக நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி,”எம்கோனே” என்ற இப்பாடல் நாளை மாலை 5.02 மணிக்கு வெளியாகிறது. இதனை சின்மயி பாடியுள்ளார்.

2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *