திரை பிரபலங்களுக்கு விருந்து வைத்த ரவிமோகன் – கெனிஷா | Ravimohan hosted a party for screen celebrities

சென்னை,
நடிகர் ரவிமோகன் மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவருடன் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கு தொடர்பான விசாரணை சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருவரது பிரிவிற்கும் கெனிஷாதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு கெனிஷாவும் அறிக்கை வாயிலாக பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் ரவிமோ கனும், கெனிஷாவும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க கெனிஷா சமீபத்தில் அவர் எழுதி பாடிய ‘அன்றும் இன்றும்’ என்ற இசை ஆல்பம் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆல்பத்தில் ரவிமோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
ஆல்பத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ரவிமோகனும் கெனிஷாவும் சென்னை ‘பப்’ ஒன்றில் திரை பிரபலங்களுக்கு விருந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கெனிஷா நடனத்துடன் பாடல்களை பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியில் நடிகர் மாதவன், இசை அமைப்பாளர்கள் டி.இமான், தரன்குமார், இயக்குனர் சுதா கொங்கரா, ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமாரவி, பாடகர் தெருக்குரல் அறிவு, நடிகர் அர்ஜூன் சிதம்பரம் உள்பட பலர் பங்கேற்றனர். ஆட்டம் பாட்டத்துடன் நடந்த விருந்து நிகழ்ச்சியின் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் கெனிஷா.